கனடாவில் அலையில் சிக்கிய சிறார்கள் நால்வர் மரணம்: வெளிவரும் துயர பின்னணி
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 11 பேர்கள் கொண்ட குழு ஒன்று அலையில் சிக்கியதில் சிறார்கள் நால்வர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மரணமடைந்த சிறார்கள் நால்வர்
குறித்த சம்பவத்தில் ஆண் ஒருவர் மாயமாகியுள்ளதாகும் தெரியவந்துள்ளது. செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையில் மீன் பிடித்திருந்த போதே சம்பவம் நடந்துள்ளது. மரணமடைந்த சிறார்கள் நால்வருக்கும் 10 வயதுக்கு மேல் இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இவர்களின் உடல்கள் சனிக்கிழமை அதிகாலை கரையில் ஒதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர்கள் இறந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
Municipalité de Portneuf-sur-Mer
ஆனால் 30 வயது கடந்த ஆண் ஒருவர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இரவு 2 மணிக்கு அவசர உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவயிடத்தில் இருந்து 6 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் Côte-Nord பகுதியிலேயே இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.