கனேடிய மாகாணமொன்றில் கருணைக்கொலை செய்யப்படும் அபாயத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள்
கனேடிய மாகாணம் ஒன்றில், பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான பன்றிகள் கருணைக்கொலை செய்யப்படும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
கியூபெக்கில் பன்றி இறைச்சி பண்ணை ஒன்றில் பணியாற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆகவே, பன்றிகளை இறைச்சியாக்க ஆட்கள் இல்லாததால், பண்ணையில் பன்றிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
அப்படி பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவை முரட்டுத்தனமாகிவிடுமாம். அப்போது அவற்றை இறைச்சிக்காக வெட்டுவதற்கு பதிலாக கருணைக்கொலை செய்யவேண்டிய சூழல் உருவாகும் என்கிறார் அந்த துறையிலுள்ள ஒருவர்.
கடந்த வாரம் கியூபெக்கில் இறைச்சிக்காக தயாரான சுமார் 130,000 பன்றிகளை இறைச்சியாக்க ஆளில்லாததால், அவை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஒரு பன்றியின் இறைச்சி 600 பேருக்கு உணவளிக்கக்கூடியது என்ற நிலையில், இத்தனை பன்றிகளை கருணைக்கொலை செய்வது மிகப்பெரிய இழப்பாகும்.
எனவே, பணியாளர்கள் துறை அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.