கொரோனா உறுதியானாலும் தொடர்ந்து வேலை செய்ய அனுமதி! கனடா மாகாணம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு உறுதியான பிறகும் சில முன்கள பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கனடாவின் கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் வகையிலே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரானின் தொற்று மிகவும் அதிவேகமானது, அதிக எண்ணிக்கையிலான சுகாதார பணியாளர்களை நீக்க வேண்டியிருக்கும்.
மேலும் இது கியூபெக் மாகாண மக்களுக்கு சிகிச்சையளிக்கு சுகாதார துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ், முன்னுரிமை மற்றும் இடர் மேலாண்மை பட்டியலின் படி, தொற்று உறுதியான ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்துள்ளோம் என சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்த நாள் மதல் கியூபெக் மாகாணத்தில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
திங்கட்கிழமை மட்டும் புதிததாக 12,833 பேருக்கு தொற்று உறுதியானது. இது கனடா மாகாணங்களில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு ஆகும்.