இணையத்தில் வைரலாகும் பிரித்தானியா மகாராணியின் செல்லப்பிராணி!
பிரித்தானியா மகாராணி உடைய செல்லப்பிராணியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2022 பிப்ரவரி 6ம் திகதியோடு பிரித்தானியாவின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது.
இந்நிகழ்வை முன்னிட்டு, வின்ட்சர் கோட்டையில் ராணி, மறைந்த தனது தந்தை தொடர்புடைய நினைவுப் பொருட்களை பார்த்தும் தொட்டு ரசித்தும் நினைகூர்ந்தார்.
மகாராணி நினைவுப் பொருட்களை பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென அவரது செல்லப்பிராணியான கேண்டி என்றழைக்கப்படும் நாய் குறுக்கிட்டது.
ராணி நினைவுக் பொருட்களை பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென கேண்டி அந்த அறைக்குள் நுழைந்துவிட்டது.
தன்னை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே வந்த கேண்டியை, மகாராணி தொட்டு கொஞ்சினார்.
இதனையடுத்து, வாலை ஆட்டிக்கொண்டே கோண்டி அந்த அறையை விட்டு வெளியேறியது.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தற்போது மகாராணியிடம் கேண்டி, Muick உட்பட 3 செல்லப்பிராணிகள் உள்ளதாம், அதில் கேண்டி தான் மிகவும் வயதான செல்லப்பிராணியாம்.