பிரித்தானியா மகாராணி இந்த ஆண்டு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக என்ன கொடுக்க போகிறார் தெரியுமா? கசிந்த தகவல்
பிரித்தானியா மகாராணி இந்த ஆண்டு தன்னுடைய ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக என்ன கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் அரச குடும்பத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த பரிசு வழங்கும் பாரம்பரியத்தை மகாராணி மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அரச குடும்பத்தில் வேலை பார்க்கும் சுமார் 1500 பேருக்கும், மகாராணியார் தனிப்பட்ட வருமானம் மூலம், புட்டிங் கேக் கொடுக்கப்படும்.
அதனுடன் சேர்ந்து ஸ்பெஷல் trinket box, ராணியின் தனிப்பட்ட சைபர் பொறிக்கப்பட்ட புகைப்பட சட்டகம் போன்றவை கொடுக்கப்பட்டது. மகாராணியார் ஊழியர்களுக்கு கொடுக்கும் புட்டிங் கேக்குகளை Harrods அல்லது Fortnum & Mason-ல் தான் ஆர்டர் செய்வார்.
ஆனால், இந்த முறை மகாராணியார் Tesco-வை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி Tesco’s Finest Matured Christmas Pudding வாங்கவுள்ளதாகவும், 800 கிராம் கொண்ட இதன் விலை 8 பவுண்ட் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இதைத் தவிர வேறும் ஏதேனும் வாழ்த்து அட்டைகள் போன்ற ஏதும் மகாராணியார் எதுவும் கொடுக்க திட்டமிட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.