மன்னர் முடிசூட்டு விழாவிற்கு முன்னாள் கணவருக்கு அழைப்பு விடுத்த கமிலா ராணியார்
பிரித்தானிய ராணியாராக முடிசூட்டவிருக்கும் கமிலா தமது முன்னாள் கணவருக்கும் அடுத்த மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கமிலா - ஆண்ட்ரூ பார்க்கர்
மன்னர் சார்லஸின் மனைவியான கமிலா, 1972 முதல் சுமார் 22 ஆண்டுகள் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் என்பவருடன் திருமண பந்தத்தில் இருந்தார்.
@PA
தற்போது, சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழாவில் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் மற்றும் அவரது பேரப்பிள்ளைகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் முன்னர் சார்லஸ் மன்னரின் சகோதரியான இளவரசி ஆன் உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இருவரும் சில காலம் காதலித்து வந்துள்ளனர் என்றே கூறுகின்றனர்.
@PA
ஆனால் தற்போது இருவரும் நண்பர்கள் என மட்டுமாக அறியப்பட விரும்புகின்றனர். மட்டுமின்றி சார்லஸ் மற்றும் ஆண்ட்ரூ ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக அறிமுகம் கொண்டவர்கள் எனவும், இருவரும் ஒரே போலோ அணியில் இணைந்து விளையாடியும் உள்ளனர்.
மேலும், சார்லஸ் - டயனா திருமணத்திற்கும் சார்லஸ் - கமிலா திருமணத்திற்கும் நண்பர்கள் வரிசையில் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் கலந்துகொண்டுள்ளார். கமிலா மற்றும் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் தம்பதிக்கு இரு பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
@Getty