மன்னர் சார்லசுடன் அமெரிக்கா சென்ற ராணி கமீலா: தனியாக வீடு திரும்பியது ஏன்?
மன்னர் சார்லசுடன் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்த ராணி கமீலா மட்டும் தனியாக வீடு திரும்ப, மன்னர் பெர்முடா தீவுகளுக்குச் சென்றுள்ளார்.
ராணி கமீலா தனியாக வீடு திரும்பியது ஏன்?
ராணி கமீலாவுக்கு விமானப்பயணம் கொஞ்சம் கஷ்டமான விடயம் என்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.
அத்துடன், இன்னொரு நாட்டுக்குப் பயணிக்கும்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசம் தன்னை கொஞ்சம் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார் கமீலா.
Getty Images
அதாவது, பிரித்தானியாவில் அதிகாலை 5.45 மணி என்றால், அமெரிக்காவில் இப்போது நள்ளிரவு 12.45 மணி. ஆக அந்த ஐந்து மணி நேர வித்தியாசம் தன்னை பாதிக்கும் என்று கூறியுள்ளார் கமீலா.
அத்துடன், விமானத்தில் பறப்பதற்கும் கமீலாவுக்கு கொஞ்சம் பயம் என கிளாரன்ஸ் இல்ல செய்தித்தொடர்பாளர் ஒருமுறை கூறியுள்ளார்.
Getty Images
மனோதத்துவ நிபுணர்களும், சிலருக்கு விமானத்தில் பறக்க பயம் இருக்கும் என்கிறார்கள். சிலருக்கு உயரம் என்றால் பயம் இருக்கும், சிலருக்கு விமான பெல்ட் போட்டுக்கொள்வது பயமாக இருக்கும், விமானத்தில் turbulence ஏற்படுவதைக் குறித்த பயம் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |