ராணி கமீலாவின் முதல் காதலர் மரணம்
பிரித்தானிய ராணி கமீலாவின் முதல் காதலர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் காதல்
மன்னர் சார்லசை, அதாவது முன்னாள் இளவரசர் சார்லசை காதலிக்கும் முன் கமீலா வேறொருவரைக் காதலித்துள்ளார். அவரது பெயர் கெவின் (Kevin Burke, 77).
1965இல் பார்ட்டி ஒன்றில் கமீலாவும் கெவினும் சந்தித்த நிலையில், இருவரும் காதலில் விழுந்துள்ளார்கள். ஆனால், அந்த காதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
Credit: Getty
கெவினை கைவிட்டுவிட்டாராம் கமீலா. மனமுடைந்த கெவின் ஆண்டு முழுவதும் கமீலாவுடனேயே இருந்தேனே, என் என்னை அவர் கைவிட்டுவிட்டார் என்று கூறி வருந்தினாராம்.
அதற்குப் பிறகு, 1973ஆம் ஆண்டு, ஆண்ட்ரூ பார்க்கர் பௌல்ஸ் என்பவரை மணந்துகொண்டார் கமீலா. அவர்களுக்கு டாம், லாரா என்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
77 வயதில் மரணம்
கமீலாவைப் பிரிந்த கெவின், 42 வயதில்தான் திருமணம் செய்துள்ளார். பீற்றா பேக்கர் என்பவரைத் திருமணம் செய்து அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்த கெவின், பின்னர் Luisa Fairey என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
58 வயதில்தான் அவருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். அவருடைய பெயர் மேக்ஸ்.
இம்மாதம் மரணமடைந்த கெவினுடைய இறுதிச்சடங்கு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |