இளவரசி டயானா கமிலாவால் தான் இறந்தார்! அனுபவித்த துன்புறுத்தல்... கமிலாவின் மருமகன் வேதனை
கமிலாவின் உறவினர் லூக் பார்க்கர் பவுல்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி.
இளம் வயதில் அனுபவித்த துன்புறுத்தல் குறித்து நினைவுக்கூர்ந்தார்.
கமிலாவின் முதல் கணவர் வழி உறவினர் இளம் வயதில் தான் எப்படியெல்லாம் அச்சுறுத்தல், துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்பதையும் அதற்கு காரணம் அரச குடும்பத்தாருடன் உறவினராக இருந்தது தான் எனவும் கூறியுள்ளார்.
லூக் பார்க்கர் பவுல்ஸ் என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆவார். இவர் கமிலாவின் முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அதன்படி கமிலாவுக்கு மருமகன் முறையாவார்.
இவர் பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சிக்கு கடந்த 2005ல் குடிபெயர்ந்தார். 1990 களில் கமிலா மற்றும் சார்லஸின் உறவின் காரணமாக பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற ’பார்க்கர் பவுல்ஸ்’ என்ற குடும்பப்பெயருடன் தான் வளர்ந்து எப்படி என்பது தொடர்பில் லூக் நினைவுக்கூர்ந்துள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் பள்ளியில் படித்த போது எல்லோரும் என்னை திட்டி கேலி பேசியதோடு கொலை மிரட்டலும் வந்தது. ஏனென்றால் இளவரசி டயானா கமிலாவால் தான் இறந்தார் என்றும் நாங்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து தான் அவரை கொன்றோம் எனவும் பலரும் தாங்களாகவே முடிவு செய்தனர்.
wionews
அது ஒரு கடினமான தருணமாக என் வாழ்வில் இருந்தது, அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப நினைத்தேன், அதனால் நான் தொண்டு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போதெல்லாம் தொடர்ந்து மூன்று மணி நேரம் நிச்சல் குளத்தில் நீந்தியது கூட நினைவில் உள்ளது.
நான் துன்புறுத்தலுக்கு ஆளானாலும், அதில் இருந்து கவனத்தை திருப்ப மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் மனதை மாற்றி அதன் மூலம் மகிழ்ச்சியடைந்தேன் என கூறியுள்ளார்.
ராணி கமிலா, ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை கடந்த 1973ல் திருமணம் செய்து 1994ல் விவாகரத்து செய்தார், அதன்பின்னர் சார்லஸை 2005ல் திருமணம் செய்தார். டயானாவை மணப்பதற்கு முன்னரே சார்லஸ் - கமிலா காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TODAY