கோஹினூர் வைரம் பதித்த கிரீடம்... இந்தியாவின் எச்சரிக்கை: கமிலா ராணியார் உறுதி
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் பெண்கள் மட்டுமே குறித்த கிரீடத்தை அணிந்து வருகின்றனர்.
10 வயதேயான சீக்கிய பேரரசருக்கு சொந்தமானது, அந்த வைரம் விக்டோரியா ராணியாருக்கு பரிசளிக்கப்பட்டது
மறைந்த எலிசபெத் ராணியார் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தொடர்பில் எதிர்பாராத விவாதம் எழுந்துள்ள நிலையில், ராணியார் கமிலா உறுதியான முடிவெடுப்பார் என்றே கூறப்படுகிறது.
குறித்த கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரம் தங்களுக்கு சொந்தமானது எனவும், அதை ராணியார் கமிலா அணிவது தங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் இந்தியா குறிப்பிட்டிருந்தது.
@getty
இந்த நிலையிலேயே ராணியார் கமிலா, தொடர்புடைய கிரீடத்தை முடிசூட்டும் நாளில் அணிவதில்லை என முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோஹினூர் வைரம் பதித்த அந்த கிரீடமானது நான்காவது ஜோர்ஜ் மன்னருக்காக 1820ல் வடிவமைத்துள்ளனர்.
அதன் பின்னர், பிரித்தானிய ராஜகுடும்பத்தில் பெண்கள் மட்டுமே குறித்த கிரீடத்தை அணிந்து வருகின்றனர். 2,800 வைர கற்கள் பதிக்கப்பட்ட அந்த கிரீடத்தில் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 105 காரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டுள்ளது.
@getty
இந்தியாவில் வெட்டி எடுக்கப்பட்ட அந்த வைரமானது 10 வயதேயான கடைசி சீக்கிய பேரரசருக்கு சொந்தமானது எனவும், பின்னர் அந்த வைரம் விக்டோரியா ராணியாருக்கு பரிசளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பரிசளிக்கப்பட்டதா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியான தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், இந்தியா உட்பட 3 நாடுகள் தங்களுக்கானது அந்த வைரம் என சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
@AP
தற்போது இந்த விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், கமிலா ராணியார் இறுதியான முடிவெடுப்பார் எனவும், பெரும்பாலும் அவர் அந்த கிரீடத்தை அணிய வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
அதற்கு பதிலாக பக்கிங்ஹாம் அரண்மனை மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது.