மன்னருடன் செய்துகொண்ட ஒப்பந்தம்: தனியாக வார இறுதி நாட்களை செலவிடும் ராணி கமீலா
மன்னர் சார்லசுக்கும் ராணி கமீலாவுக்கும் திருமணமாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகள் ஆகப்போகிறது.
இந்நிலையில், ராணி கமீலா, வார இறுதி நாட்களை தனது வீட்டில் தனியாக செலவிடுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தனியாக வார இறுதி நாட்களை செலவிடும் ராணி கமீலா
ராணி கமீலா, மன்னர் தன்னுடன் இருந்தாலன்றி தாங்கள் வாழும் Highgrove இல்லத்துக்குச் செல்வதில்லையாம்.
மாறாக, அவர் தனது Ray Mill house என்னும் வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்கிறார் Majesty பத்திரிகையின் ஆசிரியரான Ingrid Seward.
அது ராஜ வாழ்விலிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல என்று கூறும் Ingrid, ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காகத்தான் கமீலா அங்கு செல்கிறார் என்கிறார்.
மன்னருடன் செய்துகொண்ட ஒப்பந்தம்
மன்னர் சார்லசை திருமணம் செய்துகொள்ளும் முன்பே, சார்லசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டாராம் கமீலா.
தான் தனித்திருக்கும்போது நேரம் செலவிடுவதற்காக Ray Mill houseஐ தான் வைத்துக்கொள்வேன் என்பதுதான் அந்த ஒப்பந்தமாம்.
அதன்படி, கமீலா இப்போதும் வார இறுதி நாட்களில் தனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அங்கு நேரம் செலவிடுவதுண்டாம்.
ஆக, பாதுகாவலர்களின் கண்காணிப்பிலேயே இருக்காமல், விரும்பிய உடையை அணிந்துகொண்டு, கேஷுவலாக தன் வீட்டில் நேரம் செலவிடுவதற்காகத்தான் கமீலா மன்னர் சார்லஸ் இல்லாமல் Ray Mill house வீட்டுக்குச் செல்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |