திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி கமீலா: பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானிய மன்னர் சார்லசின் மனைவியான ராணி கமீலா புதிய திரைப்படம் ஒன்றின் சிறப்புக் காட்சியில் பங்கேற்க இருந்த நிலையில், அந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி கமீலா
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் ரசிகை என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரெய்க், மகாராணியாருக்காக ஸ்டண்ட் ஒன்றை செய்துகாட்டிய விடயம் நினைவிருக்கலாம்.
ராணி கமீலாவும் திரைப்படங்களை ரசிப்பவரா என்பது தெரியவில்லை. என்றாலும், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் முதல் காட்சியை அவர் காண்பதாக இருந்தது.
ஆனால், ராணி கமீலாவுக்கு சுவாசப்பாதையில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவர் அந்த திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என்று பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ராணி கமீலா காண இருந்த திரைப்படம், கிளேடியேட்டர் 2 என்னும் திரைப்படம் ஆகும். 2000ஆம் ஆண்டு வெளியான கிளேடியேட்டர் என்னும் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |