ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலை செய்த ராணி கமீலா: மன்னரை திருமணம் செய்தபின் அவரது சொத்து மதிப்பு
பிரித்தானிய மன்னரின் மனைவியான ராணி கமீலா, தனது இளவயதில் நிறுவனம் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலை செய்துள்ளார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆக, கமீலா, மன்னரை திருமணம் செய்த பிறகுதான் பெரும் செல்வந்தர் ஆனாரா? அல்லது திருமணத்துக்கு முன்பே அவர் வசதிபடைத்தவர்தானா என்பது பலரும் அறியாத ஒரு விடயமாகும்.
ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலை செய்துள்ளார்
பிரித்தானிய மன்னரின் மனைவியான ராணி கமீலா, தனது இளவயதில், லண்டனிலுள்ள Mayfair என்னுமிடத்தில், நிறுவனம் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலை செய்துள்ளார் என்பது உண்மைதான்.
கமீலா, மன்னரை திருமணம் செய்த பிறகுதான் பெரும் செல்வந்தர் ஆனாரா?
ஆனால், அவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவரது பெற்றோர் வசதிபடைத்தவர்கள்.
தன் தாய் வழியிலிருந்து கமீலாவுக்கு 500,000 பவுண்டுகள் கிடைத்துள்ளன.
அத்துடன், ஏற்கனவே 19ஆம் நூற்றாண்டு கால சொத்து ஒன்றிற்கு சொந்தக்காரரான கமீலா, தன் முதல் கணவரான ஆண்ட்ரூ பார்க்கரை விவாகரத்து செய்தபின் 850,000 பவுண்டுகள் மதிப்புடைய சொத்து ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆக, மன்னரை திருமணம் செய்தபின் கமீலாவின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அவர் திருமணத்துக்கு முன்பே செல்வந்தர்தான்.
ராணி கமீலாவின் தற்போதைய சொத்து மதிப்பு, 3.8 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், அவரது சொத்தை மன்னருடைய சொத்துடன் மதிப்பிட்டால், மன்னரின் சொத்து எங்கேயோ உள்ளது.
ஆம், பிரித்தானியாவின் பணக்காரர்கள் வரிசையில் 258ஆவது நபரான மன்னர் சார்லசின் சொத்து மதிப்பு, 610 மில்லியன் டொலர்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |