ராணி கமிலா சென்ற விமானம் பறவை மீது மோதி சேதம்! வெளியான புகைப்படம்
ராணி கமிலா பயணித்த விமானம் பறவை மோதியதால் சேதமடைந்தது.
ராணி கமிலா தொடர்ந்து பல ஆண்டுகளாக பெங்களூருவிற்கு செல்வதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து பிரித்தானியா திரும்பிய ராணி கமிலாவின் விமானம் பறவைத் தாக்குதலுக்கு உள்ளானது.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி, ராணி கமிலா, இந்தியாவின் பெங்களூரு நகரத்திலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
பறவை மீது தாக்கியதில் அந்த விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்தது. விமானத்தின் மூக்கில் பெரிய பள்ளம் உள்ள புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ராணி கமிலா தனது நண்பர்களுடன் அக்டோபர் 20 அன்று பெங்களுருவில் உள்ள சௌக்யா (Soukya) எனும் ஆரோக்கிய மையத்திற்கு சென்றார். சுமார் ஒரு வாரகாலம் அங்கே தங்கியிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக ராயல் ப்ரொடெக்ஷன் ஸ்குவாட் காவலர்கள் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் மையத்தில் தங்கியிருந்த போது பழச்சாறுகள் மற்றும் சைவ கண்ட உணவுகளை அனுபவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ராணி கமிலா தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த மையத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.
British Airways Boeing 777-200ER aircraft (G-YMMJ) suffered a bird strike today while doing Flight BA118 from Bengaluru , India to London Heathrow Airport .
— FL360aero (@fl360aero) October 28, 2022
Picture : MZulqarnainBut pic.twitter.com/VcQeJO6cNH