அரச வாழ்வில் இருந்து நழுவி விலக நினைக்கும் மன்னர் சார்லஸின் மனைவி கமீலா! எடுத்த முடிவு
அரச வாழ்க்கையிலிருந்து அவ்வபோது விலகி நழுவ தனது சொந்த வீட்டை விற்கக்கூடாது என முடிவெடுத்த கமீலா.
சொத்தை தனது சொந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்.
அரச வாழ்க்கையில் இருந்து அவ்வபோது விலகி இருக்க மன்னர் சார்லஸின் மனைவி கமீலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராணியாரின் மறைவிற்கு பிறகு பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்றார் சார்லஸ். இதையடுத்து அவர் மனைவி கமீலா Queen Consort அந்தஸ்தை பெற்றுள்ளார்.
அதன்படி கிளாரன்ஸ் ஹவுஸில் தம்பதி எளிமையான வாழ்வை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இடம் பெயர்கின்றனர். எனினும் கமீலாவிற்கு அங்கு முழுநேரம் தங்கும் எண்ணம் இல்லை, அதன்படி ரே மில் ஹவுஸ் என்று அழைக்கப்படும் தனது சொந்த வீட்டை தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.
மகாராணி மறைவிற்கு பின்னரும் ரே மில் ஹவுஸ் வீட்டில் தான் கமீலா வசித்தார். அந்த வீட்டை விற்கக்கூடாது என முடிவில் இருக்கும் அவர் அரச வாழ்க்கையிலிருந்து அவ்வபோது விலகி தப்பிக்க அந்த வீட்டை தொடர்ந்து பயன்படுத்தவுள்ளார்.

Kate Middleton's photography.
கமீலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்த பிறகு ஆறு படுக்கையறைகள் கொண்ட அந்த வீட்டை வாங்கினார் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கமீலா வீட்டை வைத்திருப்பதற்கு நடைமுறை காரணங்கள் இருப்பதாக அரச ஊழியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அவர் சார்லஸை விட அதிக காலம் வாழ்ந்தால், வசிக்க நிச்சயம் ஒரு இடம் வேண்டும் என நினைக்கிறார்.
மேலும் சொத்தை தனது சொந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதாகவும் கூறுகின்றனர்.

i-itm
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        