ராணியாரின் கிரீடத்தில் இருக்கும் வைரம் 10 வயது சிறுவனிடம் இருந்து திருடப்பட்டதா? வெளிவரும் பகீர் பின்னணி
உண்மையில் அந்த வைரமானது இந்தியாவிடம் இருந்து திருடப்பட்டதற்கு ஒப்பானதாகும்
10 வயதேயான துலீப் சிங் என்பவருக்கு கையளிக்கப்பட்ட வைரம், விக்டோரியா மகாராணிக்கு கைமாறியது.
மறைந்த பிரித்தானிய ராணியாரின் கிரீடத்தை அலங்கரிக்கும் மதிப்புமிக்க வைராமானது 10 வயது சிறுவனை ஏமாற்றி கைவசப்படுத்திய ஒன்று என அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
குறித்த வைரமானது ஆண் வாரிசுகள் அணிந்தால், அது உயிரைப்பறிக்கும் சக்தி கொண்டது எனவும் கூறுகின்றனர். அது கோஹினூர் வைரம். தற்போதைய அதன் மதிப்பு 350 மில்லியன் பவுண்டுகள்.
@reuters
இந்தியாவின் வண்டல் சுரங்கங்க பகுதியில் இருந்து 1800களில் கண்டெடுக்கப்பட்டதாகும். தற்போது ராணியார் காலமான நிலையில், அந்த வைரத்தின் உண்மையான பின்னணி குறித்து இரு வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கையில், உண்மையில் அந்த வைரமானது இந்தியாவிடம் இருந்து திருடப்பட்டதற்கு ஒப்பானதாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
லாகூர் கடைசி ஒப்பந்தத்தைப் பின்னணியாகக் கொண்டது என கூறுகின்றனர் இரு வரலாற்று ஆய்வாளர்களும். அதாவது பஞ்சாப் பிராந்தியம் இணைக்கப்பட்டபோது தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பின்னர் ஒப்படைக்கப்பட்ட நகையை கையகப்படுத்தினார்கள் என கூறுகின்றனர்.
@rediff
அதில் இந்த கோஹினூர் வைரமும் ஒன்று, என்பதால் புனையப்பட்ட கட்டுக்கதை ஒன்று, இது கடவுளும் பெண்களும் மட்டுமே அணிய வேண்டும் எனவும், ஆண் வாரிசுகள் அணிந்தால், அது சாபமாக மாறிவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மன்னர் ரஞ்சித் சிங் பஞ்சாபின் வருங்கால மன்னரான, அப்போது 10 வயதேயான துலீப் சிங் என்பவருக்கு கையளிக்கப்பட்ட வைரம் அது எனவும், இந்த துலீப் சிங் என்பவரே லாகூர் கடைசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் எனவும் கூறுகின்ரனர்.
@getty
மட்டுமின்றி, வைரத்தை குறிவைத்த இங்கிலாந்து சிறுவன் துலீப் அரியணை ஏற அனைத்து உதவிகளையும் மேற்கொண்டது. இறுதியில், சூழ்ச்சியால் வைரத்தை கைப்பற்றிய இங்கிலாந்து, 1851ல் சிறப்பு பரிசென விக்டோரியா மகாராணிக்கு கைமாறியது.
அதன் பின்னர் கோஹினூர் வைரமானது பிரித்தானிய அரச குடும்பத்தின் மதிப்பு மிக்க சொத்தாக இருந்து வருகிறது.