வாளில் கெத்தாக கேக் வெட்டிய பிரித்தானியா மகாராணி! இணையத்தை கலக்கும் வீடியோ
பிரித்தானியா மகாராணி வாளில் கேக் வெட்டிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
G7 மாநாடு நடக்கும் தளத்திற்கு அருகே உள்ள Carbis Bay-வில் பெரிய உட்புற மழைக்காடான ஈடன் திட்டத்தை தொடங்கும் நிகழ்வை பிரித்தானியா மகாராணி கேக் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த கேக் வெட்டும் நிகழ்வின் போது 95 வயதான மகாராணியுடன் மருமகள் கமிலா மற்றும் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் உடன் இருந்தனர்.
கையில் பெரிய வாளுடன் வந்த பிரித்தானியா மகாராணி, கேக்கை வெட்டி நிகழ்வை கொண்டாடினார்.
முதல் முறை கேக் வெட்டிய பின் வாளை ஒப்படைத்த மகாராணி, இரண்டாவது துண்டு கேக்கை கத்தியைப் பயன்படுத்தி வெட்டினார்.
Her Majesty The Queen attacking a cake with a sword, whilst throwing shade.
— Nigel Fletcher (@nigelfletcher) June 11, 2021
Yasss, Queen.
pic.twitter.com/2qLTzl2KFc
95 வயதில் வாளில் கெத்தாக பிரித்தானியா மகாராணி கேக் வெட்டி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.