ராணியின் இறுதிச் சடங்கு விழா: ரஷ்ய தரப்பினை அழைக்க மறுத்த பிரித்தானிய அதிகாரிகள்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கு விழாவில் கலந்து கொள்ள ரஷ்ய தரப்பு அழைக்கப்படவில்லை.
பிரித்தானிய அதிகாரிகளின் "ஆழமான முறையற்ற செயல்" என ரஷ்யா குற்றச்சாட்டு.
பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்கிற்கு ரஷ்ய அதிகாரிகள் அழைக்கப்படாதது "மிகவும் ஆழமான முறையற்ற செயல்" என ரஷ்ய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக பிரித்தானியா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவிற்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பாதியாக குறைந்தது.
இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜாங்க உறவு உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து சற்று மோதல் போக்குடனே தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில், பிரித்தானியாவை 70 ஆண்டுகள் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தார்.
ராணியின் உடல் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் (Westminster Abbey) வைத்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
? The #Russian Foreign Ministry called the decision of the #British authorities not to invite the Russian side to #Queen #Elizabeth II's funeral "deeply immoral". pic.twitter.com/BoZjr3SxQK
— NEXTA (@nexta_tv) September 16, 2022
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பிரித்தானிய அதிகாரிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ராணியாரின் இறுதிச் சடங்கு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: Smartphone-ஐ இரவில் சுவிட்ச் ஆப் செய்து வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆச்சரிய தகவல்
இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழாவிற்கு ரஷ்ய தரப்பினை பிரித்தானிய அதிகாரிகள் அழைக்காமல் தவிர்த்தது மிகவும் "ஆழமான முறையற்ற செயல்" என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.