எலிசபெத் ராணியார் நினைவாக... மன்னர் சார்லஸ், வில்லியம் குடும்பத்தினரின் முடிவு
மன்னர் சார்லஸ் -கமிலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறவும் வாய்ப்பில்லை
ராணியார் கடைசியாக தங்கியிருந்த பால்மோரல் மாளிகை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
இரண்டாம் எலிசபெத் ராணியாரின் நினைவாக வின்ட்சர் கோட்டை மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராஜகுடும்ப உறுப்பினர்கள் எவரும் குடியிருப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேல்ஸ் இளவரசராக பட்டம் பெற்ற பின்னர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி வின்ட்சர் கோட்டையில் குடியேறுவார்கள் என்றே கூறப்பட்டது. ஆனால் 5 பேர்கள் கொண்ட வில்லியம் குடும்பம் வின்ட்சர் கோட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ள அடிலெய்டு மாளிகையில் குடியேறியுள்ளனர்.
Credit: Alamy
மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறவும் வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. சுமார் 369 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்க இருப்பதால் சார்லஸ் தம்பதி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
மட்டுமின்றி, பக்கிங்ஹாம் அரண்மனையை அவர்கள் அலுவலகப் பணிகளுக்காக மட்டும் பயன்படுத்தவும், கிளாரன்ஸ் மாளிகையில் குடியிருக்கவும் முடிவு செய்துள்ளனர்.
@getty
இதனிடையே, ராணியார் கடைசியாக தங்கியிருந்த பால்மோரல் மாளிகையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்பதுடன், அங்கும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் குடியேறுவதாக இல்லை எனவும் கூறப்படுகிறது.
எலிசபெத் ராணியார் பொதுவாக வார நாட்களில் பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்கியிருப்பார், வார இறுதியில் வின்ட்சர் கோட்டைக்கு திரும்புவார், கோடையில் பால்மோரல் மாளிகைக்கு திரும்புவார்.
@getty
இந்த நிலையில், இளவரசர் ஹரி குடும்பம் பிரித்தானியா திரும்பும் என்றால் வின்ட்சர் கோட்டையில் அவர்கள் குடியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. திருமணம் முடித்து, 1,000 ஆண்டுகள் பழமையான வின்ட்சர் கோட்டையில் குடியேறிவிட ஆசைப்பட்ட ஹரிக்கு, ஃபிராக்மோர் மாளிகையில் தங்கும் நிலை ஏற்பட்டது.
மட்டுமின்றி ஃபிராக்மோர் மாளிகையில் செலவிட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் தொகையும் திருப்பிச் செலுத்தப்பட்டது.