பேரனுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை! எல்லையற்ற மகிழ்ச்சியில் அரச குடும்பம்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமெரிக்காவில் இருக்கும் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த அரச குடும்பமே எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளது.
பிரித்தானியா அரச குடும்பத்தை விட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் ஹரி-மேகன் தம்பதிக்கு கடந்த 4-ஆம் திகதி அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு, ஹரி-மேகன் தம்பதி Lilibet Diana என்று பெயர் வைத்துள்ளனர். இதில் Lilibet என்பது, பிரித்தானியா மகாராணியாரான இரண்டாம் எலிசபத்தின் புனைப் பெயர் எனவும், Diana என்பது ஹரியின் தாயாரான டயானாவை கவுரவிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congratulations to The Duke and Duchess of Sussex on the birth of Lilibet Diana! The Queen, The Prince of Wales and The Duchess of Cornwall and The Duke and Duchess of Cambridge are delighted with the news.
— The Royal Family (@RoyalFamily) June 6, 2021
Lilibet is Her Majesty’s 11th great-grandchild. pic.twitter.com/dGVeRpd3pK
இதையடுத்து, ஹரி-மேகன் தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அரச குடும்பத்தினர், ஹரி-மேகனுக்கு மகள் பிறந்திருக்கும் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹரியின் சகோதரரான வில்லியம் மற்றும் கேட் டுவிட்டர் பக்கத்தில், மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஹரி-மேகனுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
We are all delighted by the happy news of the arrival of baby Lili.
— The Duke and Duchess of Cambridge (@KensingtonRoyal) June 6, 2021
Congratulations to Harry, Meghan and Archie.