இளவரசர் வில்லியம் வருகைக்கு முன்பே மரணமடைந்த ராணி எலிசபெத்
எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் பேரிழப்பு- இளவரசர் சார்லஸ்
இளவரசர் வில்லியம் வருவதற்கு முன்பே மரணமடைந்த ராணி எலிசபெத் இளவரசர் வில்லியம், இளவரசர் ஆண்ட்ரூ வருவதற்கு முன்பாகவே ராணி எலிசபெத் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் 96 வயதில் நேற்று காலமானார்.
நேற்று பிற்பகலில் பால்மோரலில் உயிரிழந்தார் என பக்கிங்காம் அரண்மனை செய்தி வெளியிட்டது.
ராணியின் உடல்நிலை மோசமாக இருந்ததை தொடர்ந்து அரச பிரபலங்கள் பால்மோரல் நோக்கி விரைந்தனர்.
தனி விமானம் ஒன்றில் வந்த இளவரசர் வில்லியம், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட், சோஃபி உள்ளூர் நேரப்படி 3.50 மணியளவில் Aberdeen விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
Getty Images
அங்கிருந்து பால்மோரல் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போதே 4.30 மணியளவில் ராணி எலிசபெத் காலமானார்.
வில்லியம் அவர்கள் 5 மணியளவில் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அரசராக முடிசூடவுள்ளவரும், ராணியாரின் மகனுமான இளவரசர் சார்லஸின் இரங்கல் செய்தியில், எனது அன்பிற்குரிய தாயார், ராணியின் மரணம் எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கே பேரிழப்பு.
எனது அன்பான தாயை இழந்து தவிக்கிறோம், நாடு முழுவதும், காமென்வெல்த் மற்றும் உலகெங்கும் வாழும் மக்களை எனது தாயின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியது என்பதை அறிவேன் என தெரிவித்துள்ளார்.
Getty Images