ஒரு தொலைபேசி அழைப்பு... பின்னர் மயான அமைதி: ராணியாரின் இறுதி நிமிடங்கள் தொடர்பில் மன்னர் சார்லஸ்
தொடர்ந்து அறைக்கு திரும்பிய கமிலா, கணவர் சார்லசுடன் தொலைபேசி தகவலை தெரிந்துகொள்ள
ராணியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைப் பற்றி உலக மக்களுக்கும் கூறப்பட்டது
ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் இருந்து ராணியாரின் உடல் நிலை தொடர்பில் வந்த தொலைபேசி அழைப்பு மன்னர் சார்லஸை சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷின் மகள் முன்னெடுக்கும் நேர்காணலில் கமிலா பார்க்கர் கலந்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார்.
@PA
அப்போது ஊழியர் ஒருவர் அவசர அவசரமாக வெளியேறுவதை கமிலா கவனித்துள்ளார். தொடர்ந்து அறைக்கு திரும்பிய கமிலா, கணவர் சார்லசுடன் தொலைபேசி தகவலை தெரிந்துகொள்ள, உடனடியாக இருவரும் பால்மோரல் மாளிகைக்கு ஹெலிகொப்டரில் விரைந்துள்ளனர்.
செப்டம்பர் 8ம் திகதி உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் அந்த அழைப்பு வந்துள்ளது. அதே நேரத்தில், ராணியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைப் பற்றி உலக மக்களுக்கும் கூறப்பட்டது.
@getty
சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் அப்போது Dumfries மாளிகையில் இருந்துள்ளனர். சார்லஸ் இந்த நிலையிலேயே தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்கள் மொத்தமும் ஸ்தம்பித்துப் போக, அங்கிருந்த எஞ்சியர்வர்களுக்கும் அமைதி காக்கும்படி கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் சார்லஸ் மற்றும் கமிலாவுக்கும் ராணியார் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
@getty