பிரித்தானிய மகாராணி 91 ஆண்டுகளாக தினமும் சாப்பிடும் ஒரு உணவு! சுவாரசிய தகவல்
மகாராணி எலிசபெத் சாப்பிடும் உணவு தொடர்பில் ஆச்சரிய தகவல்.
91 ஆண்டுகளாக தினமும் சாப்பிடுவது ஜாம் சாண்ட்விச் உணவு தான்.
பிரித்தானிய மகாராணி கடந்த 91 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட உணவை தினமும் சாப்பிட்டு வருகிறார் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 96 வயதாகிறது. இந்த நிலையில் மகாராணி உணவுமுறை தொடர்பில் ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
ராணியின் அரண்மனையில் ராயல் செஃப்பாக இருந்தவ்வர் McGrady. இவர் 15 ஆண்டுகளாக பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிபுரிந்திருக்கிறார். McGrady கூறுகையில், ஜாம் பென்னிஸ் எனப்படும் ஜாம் சாண்ட்விச் தான் ராணியின் விருப்பமான உணவாக இருந்து வருகிறது.
Getty Images
இந்த சாண்ட்விச் அரண்மனை தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட ஸ்காட்டிஷ் ஸ்ட்ராபெர்ரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாம், சிறிதளவு வெண்ணெய் ஆகியவற்றை ரொட்டி துண்டுகளில் தடவி தயாரிக்கப்படுகிறது.
இதை தான் கடந்த 91 ஆண்டுகளாக அவர் சாப்பிடுகிறார். மதிய தேநீரின் போது ஜாம் சாண்ட்விச்சுடன் சேர்ந்து ஸ்கோன்ஸ் எனப்படும் பணியார வகை உணவையும் அவர் சாப்பிடுவார் என கூறியுள்ளார்.