பிரித்தானியா மகாராணியின் உடல்நிலை.. வைத்தியர்கள் கூறுவது என்ன? வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியை மேலும் 2 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
95 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த 20 ஆம் திகதி வடக்கு அயர்லாந்திற்கான பயணத்தை மேற்கொண்ட போது திடீரென உடல் நிலை சரியில்லாமல் பயணத்தை ரத்து செய்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவர் பணி சம்பந்தமான எந்த ஒரு பயணமும் மேற்கொள்ளமாட்டார் என்றும் ஆனால் அவர் அமர்ந்தபடியே சில பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அவர் பருவநிலை மாநாட்டில் பங்கேற்கவில்லை. பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சில வருடம் தனிமையில் இருந்தார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து வைத்தியர்கள் கூறியது, மேலும் இரண்டு வாரங்கள் ராணி கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும். எந்தவித பயணங்களும் மேற்கொள்ளகூடாது என்றும் ஒரே இடத்தில் அமர்ந்து நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடந்த கவிஞர்களுக்கு பதக்கம் அளிக்கும் நிகழ்வில் வீடியோ மூலம் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.