உலகிலேயே தலைசிறந்த மாமியார் என ராணியை புகழ்ந்த டயானா! பிறகு மாமியார் - மருமகள் உறவில் ஏற்பட்ட சிக்கல்
டயானா திருமண வாழ்வில் சிக்கல் ஆரம்பமான போது, ராணிக்கும் டயானாவுக்கும் இடையேயான உறவும் சிக்கலடைந்தது.
உலகிலேயே சிறந்த மாமியார் எனக்குக் கிடைத்துள்ளார் என ஒருமுறை கூறிய டயானா.
மறைந்த பிரித்தானிய மகாராணிக்கும் அவரின் மருமகளான இளவரசி டயனாவுக்கு இடையே இருந்த உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ரூ மார்டன் என்ற அரச குடும்ப வரலாற்றுப் பதிவாளர் Her True Story – In Her Own Words, என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, திருமண நாளில் டயானா அணிந்து கொள்ள பிரத்யேக ராஜ குடும்ப கிரீடத்தை ராணி எலிசபெத் அறிவுறுத்தினாராம். ஆனால் அதனை டயானா மறுக்கவே முதல் படியே சிக்கலானதாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பின்னர் டயானா ஆரம்ப காலங்களில் தனது மாமியார் ராணி எலிசபெத்தை நெருங்கவே மிகவும் அஞ்சியிருக்கிறார். வழக்கமான ராஜ குடும்ப நடைமுறைகளுக்காக அன்றாடம் எலிசபெத்தை சந்திப்பதைத் தாண்டி அவரிடம் டயானா நெருங்கவே இல்லையாம்.
Martin Cleaver/AP/Shutterstock
1982ல் இளவரசர் வில்லியம்ஸ் பிறக்கிறார். அப்போதிலிருந்து அரசக் குடும்பத்தில் டயானாவின் பொறுப்புக் கூடியது. அதேபோல் வில்லியம்ஸ் பிறந்த பின்னர் டயானாவுக்கும், எலிசபெத்துக்கும் நெருக்கம் பிறந்தது.
உலகிலேயே தலை சிறந்த மாமியார் எனக்குக் கிடைத்துள்ளார் என டயானா ஒரு முறை தெரிவித்திருக்கிறார். இருப்பினும், சார்லஸுக்கும் டயானாவுக்கும் இடையேயான திருமண உறவு சிக்கலானதாக செல்ல செல்ல, ராணிக்கும் டயானாவுக்கும் இடையேயான உறவும் சிக்கலடைந்துள்ளது.
அதன்படி சார்லஸுக்கும் அவரது பழைய காதலி கமிலா பார்கர் போவல்ஸுக்கும் இடையே மீண்டும் உறவு ஏற்பட்டது இது தொடர்பாக மாமியாரின் உதவியை டயானா நாடினார். அவரது ஆதரவு ஆரம்ப நாட்களில் டயானாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல டயானா தனது சோகங்களை தனிமையில் அனுபவிக்க ஆரம்பித்தார். ராணியிடம் இருந்தும் ஆதரவுகள் நின்று போனது.
இந்த விஷயத்தில் மருமகளுக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் ராணி ஒதுங்கியதாகவும் தகவல்கள் உண்டு. அதாவது, டயானாவை பொறுத்தவரையில், தனது மாமியார் எலிசபெத் தனது திருமண வாழ்வை சரி செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாக, டயானாவின் தனிப்பட்ட செயலாளர் பேட்ரிக் ஜெப்சன், சேனல் 5 தயாரித்த `டூ கோல்டன் குயின்ஸ்’ ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருவேறு தலைமுறையைச் சார்ந்த வலிமையான பெண்களுக்கு இடையே, கம்யூனிக்கேஷன் பிரச்னை இருந்ததாகவும், மேலும், ஆவணப்படத்தில் ஒரு பகுதியாக, டயானாவின், பாரம்பர்ய அரச குடும்பத்துக்கு எதிரான முட்டாள்தனமான சிந்தனைகளை நிறுத்த அரச குடும்பம் விரும்பியதாகவும் அந்த ஆவணப்படத்தில் எழுத்தாளர் ஜெப்சன் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் 1992-ல் சார்லஸ், டயானா பிரிந்தனர். 1995-ல் ராணி இருவருக்கும் விவாகரத்து செய்ய அழைப்பு விடுத்தார். இருவரும் விவாகரத்து பெற்றனர். அந்த வேளையில் டயானா அரசக் குடும்பம் பற்றி பகிரங்க பேட்டிகளைக் கொடுக்க அது அவர்களுக்கு சுமையானது.
சார்லஸை விவாகரத்து செய்ததற்குப் பின்னர் டயானா 1997 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.
Fox Photos/Getty Images