ராணி எலிசபெத் மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவா! புத்திசாலித்தனமாக் இளவரசர் ஹரியை முந்திக்கொண்ட அரச குடும்பம்
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்கான காரணம் அரச உதவியாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 8-ஆம் திகதி உயிரிழந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது இறுதிக்காலத்தில் புற்றுநோயுடன் போராடி வந்ததாக அரச எழுத்தாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் நண்பரும், அரச எழுத்தாளருமான கைல்ஸ் பிராண்ட்ரெத் (Gyles Brandreth), மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு Myeloma-ஒரு வகையான எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருந்ததாகக் கூறியுள்ளார்.
Getty Images
கைல்ஸ் பிராண்ட்ரெத் எழுத்தில் வரவிருக்கும் புத்தகமான Elizabeth: An Intimate Portrait-ல் ராணியின் உடல்நலப் போராட்டம் பற்றிய தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
இதனை, ராயல் நிபுணர் கின்சி ஸ்கோஃபீல்ட் (Kinsey Schofield) இந்த வாரம் தனது போட்காஸ்டில் பகிந்துகொண்டார்.
அவர் இது குறித்து பேசுகையில், இத்தனை நாட்கள் ரகசியமாக இருந்த தகவலை அரச குடும்பம் சரியாக திட்டமிட்டே Gyles Brandreth-ன் புத்தகத்தில் வெளியிட அனுமதித்திருக்கலாம்.
Getty Images
ஏனெனில், இளவரசர் ஹரியின் நினைவுப் புத்தகமான 'Spare' வரும் ஜனவரி 10-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்புத்தகத்தில், ராணி குறித்த இந்த ரகசிய தகவலை பாரிய விடயமாக உடைக்கலாம் என்பதால், அரச குடும்பம் இவ்வாறு செய்திருக்கலாம், இது ஒரு புத்திசாலித்தனமான நகர்வாக இருக்கும்.
மேலும் அந்தத் தகவல் எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதைக் கட்டுப்படுத்த அரச குடும்பம் விரும்பியிருக்கலாம் என கூறினார்.