ராணியின் மரணத்தால் எத்தனை சதவீத பிரித்தானியர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள் தெரியுமா? ஆய்வில் தகவல்
மகாராணியின் மரணம் பிரித்தானியாவில் பாதி மக்களை கண்ணிர் விட்டு அழவைத்துள்ளது.
ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ள தகவல்.
மகாராணி எலிசபெத் மரணமடைந்த தகவல் வந்ததையடுத்து பிரித்தானிய மக்கள் தொகையில் பாதி பேர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர் என ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
YouGov என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த ஆய்வின் மூலமே இது தெரியவந்துள்ளதாக Independent பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி YouGov நிறுவனம் ராணியின் மறைவு குறித்து 3,200 க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டது. அதில் 44 சதவீதம் பேர் ராணியின் மறைவுக்குப் பிறகு தாங்கள் கண்ணீர் சிந்தினோம் என கூறியுள்ளனர்.
punchng
ராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அவர் மரணம் காரணமாக விளையாட்டுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ரத்து செய்வது சரியானது என YouGovல் வாக்களித்த 52 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.