எலிசபெத் மகாராணியார் இறந்ததும் அந்த புற்றுநோயால்தான்... பரபரப்பைக் கிளப்பியுள்ள முன்னாள் பிரதமர்
மறைந்த பிரித்தானிய மகாராணியாரான இரண்டாம் எலிசபெத்தும் புற்றுநோயால்தான் இறந்தார் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஒருவர்.
எலிசபெத் மகாராணியார் இறந்ததும் புற்றுநோயால்தான்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன், மறைந்த பிரித்தானிய மகாராணியாரான இரண்டாம் எலிசபெத்தும் புற்றுநோயால்தான் இறந்தார் என்றும், அவருக்கு எலும்புப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மகாராணியார் போரிஸ் ஜான்சனை சந்தித்துப் பேசியுள்ளார்.
(Image: Victoria Jones - WPA Pool/Getty Images)
அதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி மகாராணியார் இயற்கை எய்திவிட்டார்.
போரிஸ் ஜான்சன் விரைவில் 'Unleashed' என்னும் புத்தகத்தை வெளியிட இருக்கிறார். அந்த புத்தகத்தில்தான் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராணியாருக்கு ஒரு வகை எலும்புப் புற்றுநோய் என எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே தெரியும் என்று குறிப்பிட்டுள்ள ஜான்சன், எப்போது வேண்டுமானாலும் அவரது உடல் நிலை திடீரென மோசமடையலாம் என மகாராணியாரின் மருத்துவர்கள் கவலைப்பட்டவண்ணம் இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
தான் மகாராணியாரை சந்திக்கச் செல்லும் முன்பும், மகாராணியாரின் தனிச்செயலரான Edward Young, கோடையின்போதே மகாராணியாரின் உடல்நிலை குறித்து தன்னை எச்சரித்திருந்ததாகவும் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தனது ஆயுள் முடிவடையப்போகிறது என்பது மகாராணியாருக்கு கோடையிலேயே தெரிந்திருந்தும் தனது கடைசிக் கடமையையும் செவ்வனே ஆற்றிவிடவேண்டும் என அவர் உறுதிபூண்டிருந்ததாக தெரிவிக்கிறார் ஜான்சன்.
அதாவது, ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, லிஸ் ட்ரஸ் பிரதமராக பொறுப்பேற்பதை அமைதியாக மேற்பார்வையிட்டதுதான் மகாராணியாரின் கடைசிப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |