பிரித்தானிய மகாராணியிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா? ஆச்சரிய புகைப்படங்கள்
மகாராணியிடம் விலையுயர்ந்த பொருட்கள் பல இருந்தன.
நகைகள், சொகுசு கப்பல் உள்ளிட்டவை அதில் அடக்கம்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
1952ல் அரியணைக்கு வந்த மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார். மகாராணியிடம் விலையுயர்ந்த பொருட்கள் பல இருந்தன. அது குறித்து காண்போம்.
HMY Britannia
இது கப்பலாகும், HMY Britannia கப்பல் 43 வருட பயணத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 நாட்டிகல் மைல்களுக்கு மேல் பயணித்தது. HMY Britannia கப்பல் 1997 இல் தனதப் பயணத்தை நிறுத்தப்பட்ட நிலையில், அரசு குடும்பத்தின் முக்கியச் சொத்தாகக் கருதப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலுக்குள் தனியார் மருத்துவமனை வசதி கூட உள்ளது.
steemit
ஓவியங்கள்
உலகின் மிகப்பெரிய தனியார் கலைத் தொகுப்பின் உரிமையாளராக விளங்குகிறார் ராணி எலிசபெத், அரசு குடும்பத்திடம் தற்போது சுமார் 10 லட்சம் ஓவியங்கள், வாட்டர்கலர்கள், வரைபடங்கள் மற்றும் அச்சிட்டுகளை வைத்திருக்கிறது. இந்த 10 லட்சம் சேகரிப்பில் பெரும்பாலானவை அரசு குடும்பத்திற்குச் சொந்தமானவை, இருப்பினும் சில ராணி எலிசபெத் ஆசைப்பட்டு சொந்தமாக வைத்துள்ளார். இதன் மதிப்பு பல மில்லியன் டொலர்களாக இருக்கும்.
GETTY
நிலம்
ராணி எலிசபெத் தலைமையிலான பிரிட்டன் அரசு குடும்பம் சுமார் 6 million ஏக்கர் நிலத்தை வைத்துள்ளது. இந்த நிலத்தின் மொத்த விலையைத் துல்லியமாக நிர்ணயிக்க முடிந்து என்பதால் தோராயமாக 33 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
அன்ன பறவைகள்
ராணி, அல்லது அந்த நேரத்தில் அரியணையில் அமர்ந்திருப்பவர் 5300 ஜோடி அன்ன பறவைகளுக்குச் சொந்தமானவர். லண்டன் தேம்ஸ் நிதியில் இதைப் பார்க்க முடியும்.
McDonald
மகாராணிக்கு மெக்டொனால்டு டிரைவ் சொந்தமாக இருந்தது வெளியிடப்பட்ட கணக்குகள் மூலம் தெரியவந்துள்ளது. 2008ல் Windsor அரண்மனையை வாங்கும் போது அதன் நிலபகுதியில் இருந்த ஒரு McDonald கடையையும் சேர்த்து ராணி எலிசபெத் வாங்கியுள்ளார்.
Sandringham estate
இது பிரித்தானிய அரச குடும்பத்தின் நான்கு தலைமுறையினருக்கான தனிப்பட்ட வீடாகவும் நோர்போக்கில் உள்ள ஆங்கிலேய கவுண்டியில் அமைந்துள்ளது. இந்த சொத்து 20,000 ஏக்கர் பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது, இந்த வீடு 1771 இல் கட்டிடக் கலைஞர் கார்னிஷ் ஹென்லி என்பவரால் கட்டப்பட்டது.
Getty Images
பக்கிங்ஹாம் அரண்மனை
830,000 சதுர அடி தளம் மற்றும் 775 அறைகள் கொண்ட பக்கிங்ஹாம் அரண்மனை இன்றும் உலகின் மிகப்பெரிய தனிநபர் வீடாகா கருதப்படுகிறது. இது பிரிட்டின் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்த அரண்மனையில் 19 அரசு அறைகள், 188 பணியாளர்கள் படுக்கையறைகள், 78 குளியலறைகள், 52 அரச விருந்தினர் அறைகள் மற்றும் 92 அலுவலகங்கள், அற்புதமான ஓவியங்கள் மற்றும் தனித்துவமான கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட முக்கிய அறைகள் உள்ளன.
britannica
1984 ஜாகுவார் சலூன்
எலிசபெத் ராணியின் பிரத்யேக சேகரிப்புகளில் 1984 ஜாகுவார் டெய்ம்லர் டபுள் சிக்ஸ் லாங்-வீல்பேஸ் சலூன் காரும் அடங்கும், இது குறிப்பாக 1984 ஆம் ஆண்டில் அவரது வின்ட்சர் தோட்டங்களைச் சுற்றவும், ராணி ஓட்டுவதற்காகத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது. ராணி, இளவரசர்கள், இளவரசிகள் மற்றும் பிரதம மந்திரிகள் உட்பட புகழ்பெற்ற நபர்களை ராஜ்யம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்த கார் மூலம் சென்றுள்ளனர்.
steemit
நகைகள்
புகழ்பெற்ற கிரீட நகைகளைக் கொண்ட சேகரிப்பில் அவரது அரச கிரீடம் "தி கேர்ள்ஸ் ஆஃப் கிரேட் பிரிட்டன் தலைப்பாகை" அடங்கும், இது ராணியின் மிகவும் விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்றாகும். எலிசபெத்-யிடம் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள் உள்ளது. இந்த இணைப்பில் 22.48 காரட் கொண்ட தனித்துவமான துளி வடிவ வைர நெக்லஸ், தென்னாப்பிரிக்க நெக்லஸ் மற்றும் வளையல், வைர காதணிகள், 200 ஆண்டுகளுக்கும் மேலான ரத்தினக் கற்கள், 23.6 காரட் வெட்டப்படாத டான்சானியாவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருப்பு நிற ஸ்னஃ பாக்ஸ் மற்றும் மார்வெல் பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
pinterest