BAR-க்கு செல்ல அரண்மனைக்குள் ரகசிய சுரங்கப்பாதை வைத்திருக்கும் பிரித்தானியா மகாராணி!
அரண்மனையிலிருந்து BAR-க்கு செல்ல பிரித்தானியா மகாராணி ரகசிய சுரங்கப்பாதை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Daily Mail ஆசிரியராக இருக்கும் ரிச்சர்ட் ஈடன் இந்த ரகசிய சுரங்கப்பாதை குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ரிச்சர்ட் ஈடன் கூறியதாவது, லண்டனில் உள்ள பிரபல பார்-க்கு செல்ல பிரித்தானியா மகாராணி அரண்மனையில் ரகசிய சுரங்கப்பாதை வைத்துள்ளார்.
அந்த பார் மகாராணிக்கு மிகவும் பிடித்தமானது என கூறினார்.
ரகசிய சுரங்கப்பாதை குறித்த தகவல், பிரித்தானியா மகாராணியின் பேத்தி இளவரசிEugenie-வின் கணவர் Jack Brooksbank உடன் பார்ட்டியில் கலந்துக்கொண்ட போது தனக்கு தெரியவந்ததாக ரிச்சர்ட் ஈடன் கூறியுள்ளார்.
அதாவது, St James's அரண்மனையிலிருந்து லண்டனின் பிரபலமான டியூக்ஸ் பார்-க்கு செல்ல ரகசிய சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.
இதுவரை நான் அந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியதில்லை, ஆனால், அதை ஒருமறையாவது பயன்படுத்த நான் விரும்புகிறேன் என Jack Brooksbank தன்னிடம் சொன்னதாக ரிச்சர்ட் ஈடன் தெரிவித்துள்ளார்.
Princess Eugenie's husband shines light on secret #royal tunnel pic.twitter.com/1ViYAOWPv2
— Richard Eden (@richardaeden) October 2, 2021
ரகசிய சுரங்கப்பாதை குறித்த செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், அரச குடும்ப ரகசியத்தை கசியவிட்டதற்காக Jack Brooksbank-ஐ பலர் விமர்சித்து வருகின்றனர்.
St James's மிகவும் பழமையாக அரச அரண்மனை என்பது குறிப்பிடத்தக்கது.