இறப்பதற்கு முன்.. பிரித்தானியா மகாராணியின் கடைசி புகைப்படம் இதுதான்
பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் நேற்று காலமானார்.
சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், 1952 இல் அரியணை ஏறியபோது அவருக்கு வயது 25.
ராணி எலிசபெத்தின் மரணம் ஒட்டுமொத்த உலகையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது கடைசி புகைப்படம் பற்றி தெரியவந்துள்ளது.
அதாவது பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்கும்போது, புதிதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதலில் பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார்.
அப்படி, கன்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ் கடந்த 6ம் திகதி ராணியை சந்தித்த போது, ஆட்சி அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே ராணியின் கடைசி புகைப்படங்களாகும், அடுத்த நாள் 7ம் திகதி ராணியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
8ம் திகதி ராணியின் உடல்நிலை மேலும் மோசமடையவே, சிகிச்சை பலனின்றி காலமானார்.
Credit: PA