எப்ஸ்டீன் ஆவணங்களில் மகாராணியாரின் பெயர்? பரபரப்பை உருவாக்கியுள்ள செய்தி
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கிய, அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

எப்ஸ்டீன் தொடர்பிலான ஆவணங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அவற்றில் ஒன்றில் மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சில பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்களில் மகாராணியாரின் பெயர்?
எப்ஸ்டீனுடைய மின்னஞ்சல்களில் ஒன்றில், நோபல் பரிசு வென்ற அறிவியலாளரான முர்ரே (Murray Gell-Mann) என்பவர், மறைந்த பிரித்தானிய மகாராணியாரான இரண்டாம் எலிசபெத், எப்ஸ்டீனுடைய வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்திருக்கக்கூடும் என தான் கருதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, கோடீஸ்வரரான எப்ஸ்டீன் பலருக்கு பொருளாதார ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.
அவ்வகையில், எலிசபெத் மகாராணியாருக்கும், எப்ஸ்டீன் பொருளாதார ஆலோசனை வழங்கியதாக ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.
மேலும், மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூ, பலமுறை எப்ஸ்டீன் மற்றும் அவரது காதலியான கிஸ்லேய்ன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் காணப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஆண்ட்ரூ, எப்ஸ்டீனுடைய காதலியான மேக்ஸ்வெல்லுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ராஜகுடும்பத்துக்குச் சொந்தமான sandringham இல்லத்தில் பார்ட்டி ஒன்றை நடத்தியாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேல், ஆண்ட்ரூ, எப்ஸ்டீனையும் மேக்ஸ்வெல்லையும், 2000ஆம் ஆண்டு, எலிசபெத் மகாராணியாரின் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்ததாகவும் பல ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மோசமான நபரான எப்ஸ்டீனுடைய ஆவணங்களில் மகாராணியாரின் பெயர் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கேட்க ஊடகவியலாளர்கள் பக்கிங்காம் அரண்மனையையும், ஆண்ட்ரூவின் ஊடக குழுவினரையும் தொடர்பு கொண்டுள்ளார்கள்.
ஆனால், பக்கிங்காம் அரண்மனை அவர்களுக்கு விளக்கம் அளிக்க மறுத்ததாகவும் ஆண்ட்ரூவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் பிரபல பிரித்தானிய ஊடகமான தி எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |