மொடல் போல போஸ் கொடுத்த எலிசபெத் மகாராணியார்: பதறிய ராஜகுடும்பத்தினர்
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் இன்று.
இந்நிலையில், ஒருமுறை அவர் ஒரு மொடலைப் போல கமெராவுக்கு போஸ் கொடுத்ததைக் குறித்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார் ராஜகுடும்ப எழுத்தாளர் ஒருவர்.
மொடல் போல போஸ் கொடுத்த எலிசபெத் மகாராணியார்
ஏஞ்சலா கெல்லி என்னும் பெண், ராஜகுடும்பத்தின் அனுமதியுடன், ’The Other Side of the Coin: The Queen, the Dresser and the Wardrobe’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் இணைப்பதற்காக புகைப்படங்கள் எடுப்பதற்கு, பிரபல புகைப்படக்கலைஞரான பேரி ஜெஃப்ரி என்பவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் மகாராணியாரை பாரம்பரியப்படி புகைப்படம் எடுக்க, மகாராணியோ, இல்லை பேரி, நான் சொல்வது போல் புகைப்படம் எடுங்கள் என்று கூறிவிட்டு, ஒரு கைதேர்ந்த மொடலைப்போல போஸ் கொடுக்கத் துவங்கினாராம்.
அவர் கொடுத்த போஸ்களைப் பார்த்து நான் வியந்துபோனேன் என்கிறார் ஏஞ்சலா.
ஆனால், அந்த புகைப்படங்கள் அந்த புத்தகத்தில் வெளியானால், ராஜகுடும்பத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என பதறினார்களாம் மகாராணியின் தாயும், உதவியாளர்களும்.
புகைப்படத்தால் எப்படி ராஜகுடும்பத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்பது எனக்குப் புரியவில்லை என்கிறார் ஏஞ்சலா. என்றாலும், அந்த புகைப்படங்கள் அவரது புத்தகத்தில் இடம்பெறவே இல்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |