டயானாவை ஒரு விஷயத்தில் தடுக்க முயன்ற மகாராணி! அவருக்கு வந்த கோபம்.. புகைப்படங்களுடன் வெளியான தகவல்

Queen Elizabeth II Princess Diana
By Raju Sep 11, 2022 10:20 AM GMT
Report

இளவரசி டயானா செய்த எச்.ஐ.வி தொண்டு பணிகளை மகாராணி தடுக்க முயன்றதாக எழுந்த விவாதம்.

அது தொடர்பில் பேசிய டயானாவின் முன்னாள் பாதுகாவலர் கென் வார்பி.

இளவரசி டயானா எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான தொண்டு பணிகளை செய்ததை மறைந்த எலிசபெத் மகாராணி ஏற்கவில்லை எனவும், அதை அவர் தடுக்க முயன்றார் எனவும் தற்போது சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். இதையடுத்து ராணி தொடர்பான செய்திகள் தான் தற்போது வரை சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இளவரசி டயானா எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொண்டு பணிகளை செய்ததை மகாராணி தடுக்க முயற்சித்ததாக ஒரு பதிவு டுவிட்டரில் வைரலானது. 1981 இல் சார்லஸை மணந்த டயானா, ஏப்ரல் 9, 1987 இல் லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவர் அதிகாரப்பூர்வமாக HIV/AIDS நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் பிரத்யேக மருத்துவ வார்டைத் திறந்தார்.

டயானாவை ஒரு விஷயத்தில் தடுக்க முயன்ற மகாராணி! அவருக்கு வந்த கோபம்.. புகைப்படங்களுடன் வெளியான தகவல் | Queen Elizabeth Princess Diana Hiv Charity Work

JAYNE FINCHER/GETTY IMAGES/ANWAR HUSSEIN/WIREIMAGE

அங்கு எந்த கையுறையும் அணியாமல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளியின் கையை குலுக்கி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபரை தொடுவதன் மூலம் அந்த நோய் பரவும் என தவறாக பரப்ப்பட்ட தகவலை முறியடிக்கவே டயானா அவ்வாறு செய்தார்.

இதோடு இந்தோனேசியாவில் உள்ள தொழுநோய் மருத்துவமனையையும் பார்வையிட்டார், அங்கு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் கட்டப்பட்ட காயங்களைத் தொட்டுப் பார்த்திருக்கிறார்.

இதனிடையில் டுவிட்டரில் வெளியான அந்த பதிவில், டயானாவின் இந்த தொண்டு பணியை மகாராணி தடுத்து நிறுத்த முயன்றார். மேலும் தனது மருமகளிடம், வேறு எதாவது இனிமையான மற்றும் மகிழ்வூட்டும் பணியை செய்யுமாறு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டயானாவின் முன்னாள் பாதுகாவலர் கென் வார்பி முன்னர் கூறுகையில், ஒருமுறை ராணியிடம் பேசிவிட்டு வந்த போது டயானா வருத்தமாக இருந்தார். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என நான் கேட்டதற்கு, நான் எய்ட்ஸ் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பது ராணிக்கு பிடிக்கவில்லை, நீ ஏன் இன்னும் இனிமையான மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய வேறு விஷயங்களில் ஈடுபடக்கூடாது என அவர் கேட்டார்.

பின்னர் டயானாவுக்கு கோபம் வந்தது, நான் செய்யும் பணியை ராணி பார்க்கவே இல்லை, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பிரச்சாரங்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஈடுபட வேண்டும் என தான் விரும்பியதாக டயானா தன்னிடம் கூறியதாக கென் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், நவம்பர் 2007 இல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உகாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை காண சென்ற மகாராணி அங்கு சிகிச்சையில் இருந்த நோயாகளுக்கு கைகுலுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டயானாவை ஒரு விஷயத்தில் தடுக்க முயன்ற மகாராணி! அவருக்கு வந்த கோபம்.. புகைப்படங்களுடன் வெளியான தகவல் | Queen Elizabeth Princess Diana Hiv Charity Work

POOL/GETTY IMAGES

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US