பிரித்தானிய மகாராணி ஓய்வுபெற வேண்டும்! மக்கள் கருத்து
Ragavan
in ஐக்கிய இராச்சியம்Report this article
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
பிரித்தானியாவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் ராணியாக இருப்பதை விட ஓய்வு பெற வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
டைம்ஸ் வானொலிக்காக YouGov-ஆல் கருத்துக்கணிப்பு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பதிலளித்த மூன்றில் ஒருவர் ராணி ஓய்வு பெற வேண்டும் என்று நினைப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கம்மைத் தொற்று கண்டுபிடிப்பு
இந்த ஆய்வுக்கான வாக்குப்பதிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அந்த நேரத்தில், பாதிக்கு மேற்பட்ட மக்கள் ராணி வாழ்நாள் முழுவதும் அரியணையில் இருக்க வேண்டும் என்று கருதினர்.
ஆனால், சமீபத்திய கணக்கெடுப்பு வேறுபட்ட படத்தைக் காட்டுகிறது. 34 சதவீதம் பேர் ராணி ஓய்வு பெற வேண்டும் என்று கூறுகிறார்கள், 49 சதவீதம் பேர் அதாவது பாதிக்கும் குறைவானவர்கள் தான் அவர் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இலங்கை எம்.பி மரணம் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!
EXCLUSIVE: New @YouGov poll for @TimesRadio reveals sharp rise in number who think the Queen should retire.
— Matt Chorley (@MattChorley) May 13, 2022
Comes after Prince Charles stood in at state opening of parliament
34% say Queen should retire
49% say she should remain Queen for life
More on @TimesRadio now pic.twitter.com/kFPaZyg4tN
ராணி எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக பாராளுமன்றத்தை திறப்பதில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (மே 13) ஒரு அரிதாக பொதுவெளியில் தோன்றினார். 60 ஆண்டுகளில் முதல் முறையாக விழாவில் இருந்து வெளியேறினார்.