ஆவியாக வரும் ராணி எலிசபெத்., நாய்களின் நடத்தையை பார்த்து அலறும் இளவரசி
மறைந்த ராணி எலிசபெத் தான் வளர்த்த நாய்கள் மூலம் பேசுவதாக பிரித்தானிய அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் தான் ஆசையாக வளர்த்த நாய்கள் மூலமாக தொடர்பு கொள்வதாக, அவரது மருமகளும் இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவியுமான சாரா பெர்குசன் கூறியுள்ளர்.
65 வயதான யார்க் இளவரசி சாரா, லண்டனில் நடைபெற்ற Creative Women Platform Forum மாநாட்டில் இந்த வியப்பூட்டும் கருத்தை தெரிவித்தார்.
“நான் ராணியின் நாய்கள் Muick மற்றும் Sandyயை வளர்த்துவருகிறேன். ஒவ்வொரு காலையும் அவைகள் என் அறைக்குள் வந்து ‘வூஃப் வூஃப்’ என்று சத்தம் போடுகிறது.
அது ராணி என்னுடன் பேசுவதைப் போல் இருக்கிறது,” என்று அவர் கூறினார். இந்த கருத்து கூட்டத்தில் நகைச்சுவையாக வரவேற்கப்பட்டது.
சாரா பெர்குசன் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ, விவாகரத்துக்குப்பின் கூட, Windsor Royal Lodge-இல் இணைந்து வாழ்கிறார்கள். மறைந்த ராணியின் இரண்டு corgi நாய்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சாரா பெர்குசனின் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
ராணி எலிசபெத் தன் வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட corgi மற்றும் dorgi வகை நாய்களை வைத்திருந்தவர்.
“நாய்கள் எதையாவது பார்த்து அலைந்து கத்தும்போது, அருகில் ராணியின் ஆவி இருக்கிறதா என நினைக்கிறேன்,” எனவும் அவர் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Queen Elizabeth corgis, Queen Elizabeth dogs, Queen Elizabeth spirit corgis, Sarah Ferguson dog claim, Royal corgis Muick Sandy, Duchess of York corgi story, Queen Elizabeth ghost news, UK royal family pets, Queen Elizabeth afterlife, Corgis and Queen connection, Sarah Ferguson royal dogs, Viral UK royal news 2025