ராணியை மூன்று முறை கொல்ல நடந்த சதி! வாழ்க்கையில் வந்த 3 வில்லன்கள்... பலருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்கள்
மறைந்த எலிசபெத் ராணியை கொல்ல மூன்று முறை முன்னர் நடந்த சதி.
பலருக்கும் தெரியாத அதிர்ச்சி ரிப்போர்ட்.
அடிமை முறையில் இருந்து மீண்ட இனக்குழுக்களுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தினர் மீது எப்போதும் ஒரு விமர்சன பார்வை உண்டு.
அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இனக்குழுக்களுக்கு இது இன்னும் அதிகம். இதன் அரச குடும்ப பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காகவே அந்த குடும்பத்தாருக்கு பல அடுக்கு பாதுகாப்பு உண்டு.
ராணி எலிசபெத் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியவர், துணிச்சலான குணாதிசயங்களை கொண்டவர். எலிசபெத் ராணி வசித்த பக்கிங்காம் அரண்மனையை சுற்றி எப்போதும் சிறப்பு பாதுகாப்பு இருக்கும்.
ebay
எல்லாவற்றையும் மீறி ராணியின் உயிரை எடுக்க மூன்று முறை சதி நடந்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
1970
ராணி மற்றும் அவர் கணவர் பிலிப் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டனர். அப்போது சிட்னியில் இருந்து நியூ சவுத் வேல்ஸுக்கு ரயிலில் ராணி சென்ற போது ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. தண்டவாளத்தில் தடுப்புகள் வைக்கப்பட்ட போதிலும் சதிகாரர்கள் எதிர்பார்த்தபடி ரயில் கவிழவில்லை. இதை யார் செய்தார்கள் என தெரியாத நிலையில் ஐ ஆர் ஏ எனப்ப்படும் ஐரிஷ் ராணுவ சதியாக இருக்கலாம் என அப்போது செய்தி பரவியது.
1981
அந்த ஆண்டில் லண்டனில் மக்கள் கூட்டமாக இருக்க ராணி குதிரையில் வந்தார். அப்போது மார்கஸ் சர்ஜின் என்ற 17 வயது இளைஞர் கையில் வைத்திருந்த பிஸ்டலில் ஆறு குண்டுகளை சுட்டார். பொலிசார் உடனே மார்க்கஸை அள்ளி கொண்டு போய் விசாரிக்க பிரபலமவதற்காக இப்படி செய்ததாக கூறியிருக்கிறார். தேச துரோக வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
1981
அதே 1981ல் ராணியை கொல்ல மூன்றாவது முயற்சி நடந்தது. அப்போது நியூசிலாந்துக்கு ராணி பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு காரில் இருந்து அவர் இறங்கும் போது 17 வயது கிரிஸ்டோபர் ஜான் லீவிஸ் என்பவர் பக்கத்தில் இருந்த கட்டிடத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டார்.
ராணி அருகே குண்டு படவில்லை என்றாலும் பலத்த சத்தம் பரபரப்பை எகிற வைத்தது, இதையடுத்து லீவிஸை பொலிசார் கைது செய்தனர்.
பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர் சிறையில் இருந்து தப்பிய நிலையில் 1997ல் இளம்பெண்ணை கொன்று அவர் மகளை கடத்திய குற்றத்திற்கு உள்ளானார். பிறகு அவர் மின்சாரத்தை தன் உடலில் பாய்த்து இறந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
The Associated Press