ராணியாரின் இறுதிச் சடங்கு நாள்... வங்கி விடுமுறை: யார் யாருக்கு விடுப்பு கிடைக்கும்?
தேசிய வங்கி விடுமுறை மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு ஒரு நாள் விடுப்புக்கு வாய்ப்பு
அரசாங்கம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி, இந்த விடுமுறையானது அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது
பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும் நாளில் தேசிய வங்கி விடுமுறை என உறுதி செய்யப்பட்ட நிலையில், மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு ஒரு நாள் விடுப்புக்கு வாய்ப்பு அமைந்துள்ளது.
மறைந்த ராணியாரின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 திங்கட்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறும் என்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
@getty
மேலும், அன்றைய நாள் உத்தியோகப்பூர்வமாக வங்கி விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு ஒருநாள் விடுமுறை கிடைத்துள்ளது.
ஆனால் அரசாங்கம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி, இந்த விடுமுறையானது அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது என்றே தெரியவந்துள்ளது. அதாவது, அந்தந்த நிறுவன நிர்வாகமே தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கலாமா என்பதை முடிவு செய்ய அறிவுறித்தியுள்ளனர்.
@reuters
இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்றே கூறுகின்றனர். மேலும், நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்த ஏற்பாடுகளில் அரசாங்கம் தலையிட முடியாது என்றே சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், அன்றைய நாள் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு செல்ல வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, இறுதிச் சடங்கிற்காக பள்ளிகள் மூடப்படும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே பல பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு அன்றைய தினம் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று நம்புகிறார்கள்.
மேலும், ஊழியர்களே முடிவு செய்து கொள்ளலாம், அன்றைய நாள் விடுப்பு எடுக்க வேண்டுமா அல்லது பணிக்கு திரும்ப வேண்டுமா என்று.
@getty
ராணியாரின் உடல் இறுதிச் சடங்குகளுக்கு முன்னர் நான்கு நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நான்கு நாட்களில் 23 மணி நேரமும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றே அரண்மனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.