ராணியாரின் இறுதிச் சடங்கு... மன்னர் சார்லஸ், ஹரி, வில்லியம்: யார் யாருக்கு எங்கே இருக்கைகள்?
மன்னர் சார்லஸுக்கு நேர் பின்னால், இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெற்கே 14 வரிசைகள் பின்னோக்கி செக் குடியரசு ஜனாதிபதிக்கு முன்னால் அமர்வார்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ரஜகுடும்பத்து உறுப்பினர்கள் முதல் அமெரிக்க ஜனாதிபதி வரையான முக்கியஸ்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இதில் எவருக்கும் எந்த மனக்கசப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ராஜகுடும்பம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
Image: Ian Vogler
உலகெங்கிலும் இருந்து 2,000 முக்கியஸ்தர்கள் ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு கலந்து கொண்டுள்ளனர். இதில் தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் யார் யாருக்கு எங்கே இருக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட கனடா கிளப் நாற்காலிகளில் அமர்ந்திருப்பார்கள். கமிலாவுக்கு அடுத்த இருக்கையில் இளவரசி ஆன், அடுத்ததாக வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸ், அடுத்ததாக இளவரசர் ஆண்ட்ரூ, தொடர்ந்து இளவரசர் எட்வார்ட் அமர்ந்திருப்பார்.
@getty
இவர்களுக்கு குறுக்கே இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் மற்றும் இவர்களின் இரு பிள்ளைகள் அமர்ந்திருப்பார்கள். இதே வரிசையில் இளவரசர் பிலிப்ஸ், ஸாரா மற்றும் மைக் டிண்டல் ஆகியோருக்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸுக்கு நேர் பின்னால், இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது. கமிலா ராணியாருக்கு நேர் பின்னால் மேகன் மெர்க்கல் அமர்ந்திருப்பார். மேகனுக்கு அருகே இளவரசி பீட்ரைஸ் இருக்கை.
Image: Tim Rooke
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போலந்து ஜனாதிபதிக்குப் பின்னால் தெற்கே 14 வரிசைகள் பின்னோக்கி செக் குடியரசு ஜனாதிபதிக்கு முன்னால் அமர்வார். இவர்களுடன் முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அழைப்பு விடுக்கப்படாத நாடுகளான ரஷ்யா, பெலாரஸ் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முக்கியஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனிடையே, ஈரான், வடகொரியா மற்றும் ஒருசில நாடுகள் தூதரக அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@getty