ராணியாருக்கான இறுதி மரியாதை... இதுவரை மருத்துவமனையை நாடிய 300 பேர்
திங்கட்கிழமை பகல் 6.30 மணி வரையில் மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்,
வரிசையில் காத்திருக்கும் மக்களில் 300 பேர்கள் அவசர ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளதாக தகவல்
காலமான பிரித்தானிய ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
எதிர்வரும் 19ம் திகதி பகல் 6.30 மணி வரையில் பொதுமக்களுக்கு மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வரிசை 5 மைல்களை கடந்துள்ளதாகவும், 9 மணி நேரம் தோராயமாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
@getty
இதன் பின்னார் வரிசையில் வரும் மக்கள் 14 மணி நேரம் வரையில் காத்திருக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வரிசையில் காத்திருக்கும் மக்களில் 300 பேர்கள் இதுவரை அவசர ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெட்டவெளியில் வரிசையில் காத்திருக்கும் மக்கள் உரிய ஆடைகளை எடுத்துவரவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமலும், தங்களுக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துவராத மக்களே மருத்துவமனையை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
@reuters
புதன்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக ராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு மரியாதை செலுத்தினர்.
மதியம் 2.22 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் அவரது இரு மகன்கள் இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் பின்னால் நடந்து வர, ராணியார் கடைசி யாத்திரையாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து புறப்பட்டார்.
@PA
வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் சுமார் 20 நிமிடங்கள் மத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து மாலை 5 மணிக்கு பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.
எதிர்வரும் திங்கட்கிழமை பகல் 6.30 மணி வரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும், அன்று மாலையில் ராணியாருக்கு இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும்.
இந்த நிலையில் பொதுமக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.