இறுதியில் போராடி வென்ற இளவரசர் ஹரி: ராணியார் இறுதிச் சடங்கில் சிறப்பு அனுமதி
இளவரசர் வில்லியம், ஹரி ஆகியோர் ராணியாரின் எஞ்சிய ஆறு பேரப்பிள்ளைகளுடன் சிறப்பு அஞ்சலி
இளவரசர் ஹரிக்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளதுடன், இராணுவ உடையில் ராணியாருக்கு மரியாதை செலுத்துவார்கள்
மறைந்த ராணியாருக்கு மரியாதை செலுத்தும் சிறப்பு நிகழ்வின் போது இளவரசர் ஹரி அவரது இராணுவ சீருடையை அணிய அரண்மனை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் சனிக்கிழமையன்று ராணியின் நினைவாக சிறப்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
@getty
இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் ராணியாரின் எஞ்சிய ஆறு பேரப்பிள்ளைகளுடன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் 15 நிமிட சிறப்பு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
குறித்த நிகழ்வின் போது எட்டு பேரக்குழந்தைகளும் ராணியாரின் சவப்பெட்டிக்கு அருகில் அமைதியாக நின்று மரியாதை செலுத்துவார்கள். இதில், இளவரசர் ஹரி இராணுவ உடை அணிய அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
@getty
மட்டுமின்றி, ஹரி தரப்பிலும் ராணியாருக்காக துக்கமனுசரிக்கும் இந்த ஒருவார காலம் இராணுவ உடை அல்லாமல் பொதுவான துக்கமனுசரிப்பு உடையில் மட்டுமே காணப்படுவார் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது இளவரசர் ஹரிக்கு அரண்மனை சிறப்பு அனுமதி அளித்துள்ளதுடன், அவரும் இளவரசர் ஆண்ட்ரூவும் இராணுவ உடையில் ராணியாருக்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@pa
இதனிடையே, ராணுவத்தில் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லாத ஹரி எந்த சீருடை அணிவார் என்பது தொடர்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
இராணியாரின் மறைவுக்கு பின்னர், முன்னெடுக்கப்பட்ட எந்த நிகழ்விலும் இளவரசர் ஹரி இராணுவ உடையில் காணப்படவில்லை.
மேலும், சுமார் பத்தாண்டு காலம் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றியவர் இளவரசர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.