முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் ராணியாரை கடைசியாக சந்தித்த அன்றே... இறுதிச்சடங்கு பணிகள் தொடங்கியது!
ராணியாரின் இறுச்சடங்குகளில் கலந்துகொள்ள விருது பெற்ற Johnson Beharry என்பவருக்கு மின்னஞ்சல் தகவல்
எலிசபெத் ராணியார் கடைசியாக சந்தித்த அரசியல் தலைவர் லிஸ் ட்ரஸ் என்றே கூறப்படுகிறது.
பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்கவிருந்த லிஸ் ட்ரஸ் ராணியாரை கடைசியாக சந்தித்த அன்றே இறுதிச்சடங்குகளளுக்கான பணிகள் துவக்கப்பட்டதாக ராணுவ வீரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் ஜோன்சன் பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ் ட்ரஸ், நெறிமுறைகளின் அடிப்படையில் ராணியாரை சந்திக்க பால்மோரல் மாளிகைக்கு சென்றிருந்தார்.
@getty
ராணியார் தான் நாட்டின் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பால்மோரல் மாளிகைக்கு சென்ற லிஸ் ட்ரஸ் ராணியாரை சந்தித்து அனுமதி பெற்று, பின்னர் பிரதமராகவும் பொறுப்பேற்றார்.
ஆனால், செப்டம்பர் 6ம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகளிடம் இருந்து, ராணியாரின் இறுச்சடங்குகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, பிரித்தானிய மரியாதை முறையின் மிக உயர்ந்த மற்றும் மிகவும் மதிப்புமிக்க விருதான விக்டோரியா கிராஸ் என்ற விருது பெற்ற வீரரான Johnson Beharry என்பவருக்கு மின்னஞ்சல் தகவல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பில் அவருக்கு மீண்டும் உறுதி செய்வதற்கான தொலைபேசி அழைப்பும் வந்துள்ளது. இதன் அடுத்த நாள், ராணியார் காலமானதாக அறிவிக்கப்படவும், தேசம் மொத்தம் துக்கமனுசரிப்பில் மூழ்கியது.
@getty
எலிசபெத் ராணியார் கடைசியாக சந்தித்த அரசியல் தலைவர் லிஸ் ட்ரஸ் என்றே கூறப்படுகிறது. மேலும், செப்டம்பர் 7ம் திகதி மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ராணியார் கலந்துகொள்ளும் முக்கிய கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நாள் மதியத்திற்கு மேல் 3.10 மணியளவில் ராணியார் காலமாகியுள்ளார். ஈராக்கில் ஆற்றிய சேவைக்காக விக்டோரியா கிராஸ் விருது பெற்ற Johnson Beharry அரண்மனை விடுத்த அழைப்பை ஏற்ற்க்கொண்டு, இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டார்.
ராணியார் தமக்கு ஒரு பாட்டியார் போன்றவர் என குறிப்பிட்டுள்ள ஜோன்சன், ராணியார் இல்லாமல் எனக்கு இப்போதைய இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது என்றார்.