ராணியாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க மூன்று நாடுகளுக்கு தடை: ஒரு நாட்டுக்கு கட்டுப்பாடு
அனைத்து நாடுகளுக்கும் ராணியாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அரசாங்கத்தால் அழைப்பு
ரஷ்யா, பெலாரஸ் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்
பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19ம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், மூன்று நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தின் அனுமதியுடன் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ராணியாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க லிஸ் ட்ரஸ் அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
@AFP
ஆனால், ரஷ்யா அதன் மிக நெருக்கமான கூட்டாளியான பெலாரஸ் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் நாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், தூதரகம் ஊடாக மட்டும் அதிகாரிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் முன்னெடுக்கப்படும் சிறப்பு ஆராதனைகளுக்கு பின்னர் கணவர் பிலிப்புடன் ராணியாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியா தனது மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளுடன் இணைந்து, இத்தருணத்திலும் ரஷ்யாவை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளது.
@Sputnik
மட்டுமின்றி ரஷ்யாவின் மிக நெருக்கமான கூட்டாளியான பெலாரஸ் நாட்டுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத்தின் மீதும் பிரித்தானியா தடை விதித்துள்ளதால், அந்த நாட்டிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
மொத்தம் 500 வெளிநாட்டுத் தலைவர்கள் திங்களன்று முன்னெடுக்கப்படும் ராணியாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் மற்றும் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள் ஏற்கனவே உறுதி அளித்துள்ளனர்.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போதைய சூழலில் ராணியாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்கமாட்டார் என உத்தியோகப்பூர்வமாக அதிகாரிகள் தரப்பு வெள்ளிகிழமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.