அன்று டயானா இறுதிச் சடங்கில் வில்லியம்... மொத்த கவனத்தையும் ஈர்த்த ராணியாரின் இன்னொரு பேரப்பிள்ளை
மிகத்துணிவாக 15 நிமிடங்களும் குனிந்த தலை நிமிராமல் பாட்டியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
குறித்த நிகழ்வு தங்களுக்கு இன்னொரு நிகழ்வை நினைவூட்டுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ராணியாருக்கு நேற்று மொத்த குடும்பமும் முன்னெடுத்த சிறப்பு மரியாதை நிகழ்வில், அவரது மிக இளைய பேரப்பிள்ளை ஒருவர் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மறைந்த ராணியாருக்கு சனிக்கிழமை இரவு பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
@Sky
15 நிமிடங்கள் நீண்ட இந்த சிறப்பு மரியாதை நிகழ்வில், இளவரசர் வில்லியம், ஹரி உட்பட மிக்கிய உறுப்பினர்கள் ராணுவ உடையில் காட்சியளித்தனர். இந்த நிகழ்வில் இளவரசர் எட்வர்டின் மகன் 14 வயதேயான ஜேம்ஸ், விஸ்கவுண்ட் செவர்ன் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமது உறவினர்கள் வில்லியம், ஹரி உட்பட அனைவருடனும் மிகத்துணிவாக 15 நிமிடங்களும் குனிந்த தலை நிமிராமல் பாட்டியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் ஜேம்ஸ், விஸ்கவுண்ட் செவர்ன்.
@Sky
இந்த இளவயதில் இப்படியான ஒரு நிகழ்வில் ஜேம்ஸ், விஸ்கவுண்ட் செவர்ன் காட்டிய பக்குவத்தை மக்கள் மெச்சியுள்ளதுடன் போற்றுதலுக்கு உரியது என கொண்டாடியுள்ளனர். ஆனால், குறித்த நிகழ்வு தங்களுக்கு இன்னொரு நிகழ்வை நினைவூட்டுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
@Afp
1997ல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் நடவடிக்கைகளை ஒத்திருந்ததாக கூறியுள்ளனர். குறிப்பாக இளவரசர் வில்லியம் தமது தாயாருக்கு மரியாதை செலுத்தியதை ஒத்திருப்பதாக ஜேம்ஸ் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் ஹரியை நினைவு கூர்ந்துள்ளனர். டயானா இறக்கும் போது இளவரசர் வில்லியத்திற்கு 15 வயது ஹரிக்கு 12 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
@AP
