ராணியார் சவப்பெட்டி சுமந்த பெருமை... கொண்டாடப்பட்ட அந்த 8 பேர்: மீண்டும் போர் களத்தில்
8 பேர்கள் கொண்ட அந்த குழு ராணியாரின் இறுதிச்சடங்கில், அவரது சவப்பெட்டியை சுமந்து பெருமை சேர்த்தனர்.
இஸ்லாமிய அரசின் தாக்குதலில் இருந்து இங்கிலாந்து சிறப்புப் படை முகாமைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மறைந்த ராணியாரின் சவப்பெட்டி சுமந்த அந்த 8 வீரர்களும், இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் அமெரிக்க துருப்புகளுடன் இணைந்து முக்கிய ராணுவ தளத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றே தெரியவந்துள்ளது. ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் இருந்து லண்டன் திரும்பும் வரையிலும்,
@getty
இங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்ட்ர் ஹால், தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம், அதன் பின்னர் விண்ட்சர் மாளிகை சிற்றாலயம் என ராணியாரின் சவப்பெட்டியை சுமந்தவர்கள் இந்த 8 வீரர்களும்.
தற்போது இவர்கள் 8 பேரும் உயரதிகாரி ஒருவர் என, இந்த குழு அமெரிக்க சிறப்பு குழுவுடன் இணைந்து எர்பில் பகுதியில் அமைந்துள்ள வடக்கு ஈராக் விமான தளத்தை பாதுகாக்கும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
@getty
சார்ஜென்ட் மேஜர் டீன் ஜோன்ஸ் தலைமையில், 8 பேர்கள் கொண்ட அந்த குழு ராணியாரின் இறுதிச்சடங்கில், அவரது சவப்பெட்டியை சுமந்து பெருமை சேர்த்தனர். தற்போது அவர்கள், இஸ்லாமிய அரசின் தாக்குதலில் இருந்து இங்கிலாந்து சிறப்புப் படை முகாமைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆபரேஷன் ஷேடர் என்ற குறியீட்டுப் பெயரில் அறியப்படும் முக்கியமான பணியில் அவர்கள் களம்காண உள்ளனர். குறித்த முகாமானது சமீபத்தில் கடுமையான தாக்குதலுக்கு இலக்கானது.
@getty
ஈரானிய நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்றே உளவுத்துறை நம்புகிறது.
இதனிடையே, ராணியாருக்காக சேவையாற்றிய இந்த 9 பேர்களுக்கும் MBE விருது அளிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.