ஹரி மேகன் தம்பதியை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம் வைத்திருந்த மகாராணியார்
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், இளவரசர் ஹரி, மேகன் தம்பதியை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம் வைத்திருந்ததாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹரி மேகன் தம்பதியை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்
எலிசபெத் மகாராணியார் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி இயற்கை எய்தினார்.
ஆனால், அவர் உயிருடன் இருந்திருப்பாரானால், ஹரி, மேகன் தம்பதியை வீட்டை விட்டு வெளியேற்றியிருப்பார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ராபர்ட் ஹார்ட்மேன்.
Frogmore Cottage என்னும் பங்களாவை ஹரி மேகன் திருமணத்தின்போது அவர்களுக்கு பரிசாக கொடுத்திருந்தார் மகாராணியார்.
ஆனால், ஹரி, மேகன் தம்பதி, 2020ஆம் ஆண்டு ராஜ குடும்ப பொறுப்புகளைத் துறந்தார்கள். நிதி ரீதியாக கணக்குப் பார்த்த மகாராணி, அதற்குப் பிறகு ஹரியும் மேகனும் Frogmore Cottageஇல் தங்குவது சரியாக இருக்காது என எண்ணியுள்ளார்.
ஆகவே, ஹரி, மேகன் தம்பதியை அந்த பங்களாவிலிருந்து வெளியேற்றிவிட்டு, தனது இளைய மகனான இளவரசர் ஆண்ட்ரூவை அந்த வீட்டில் குடியேற்ற அவர் திட்டம் வைத்திருந்தாராம்.
ஆனால், அதற்குள் அவர் இயற்கை எய்திவிட்டார். என்றாலும், அவர் இல்லாவிட்டாலும், அடுத்து மன்னரான சார்லஸ், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹரி, மேகன் தம்பதியை வீட்டை காலி செய்ய உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வீட்டை காலி செய்த ஹரி, மேகன் தம்பதி, வீட்டை விட்டு மட்டும் அல்ல, நாட்டை விட்டே வெளியேறியது அனைவரும் அறிந்ததே.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |