விசுவாசமான ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கிய மகாராணி!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்கு தயாராகும் வகையில் இன்று தனது ஊழியர்களுக்கு ஐந்து சதவீதம் வரை ஊதிய உயர்வை வழங்கியுள்ளார்.
அதன்படி, விசுவாசமான பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 2.5 சதவீதம் ஊதிய உயர்வு கிடைக்கும், ஆனால் பெரும்பான்மையோருக்கு 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக ஊதிய உயர்வு முடக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் இப்போது தாங்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை ஈடுசெய்யும் வகையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Picture: AP
இது மகாராணியின் பவளவிழா கொண்டாட்டத்திற்கான போனஸாகக் கணக்கில் எழுதப்படவில்லை, கடந்த இரண்டு வருடங்களாக அனைவரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.