பிரித்தானிய மகாராணியாரின் ஹெலிகொப்டரில் தொழில்நுட்பக்கோளாறு: தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்
பிரித்தானிய மகாராணியாரின் ஹெலிகொப்டர் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சம்பவத்தின்போது ராஜ குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஹெலிகொப்டரில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஸ்காட்லாந்திலிருக்கும் பால்மோரல் மாளிகையில் தங்கியிருக்கும் பிரித்தானிய மகாராணியாரின் மகளான இளவரசி Anneஐ அழைத்துக்கொண்டு வருவதற்காக புறப்பட்ட அந்த ஹெலிகொப்டர் பயணித்துக்கொண்டிருக்கும்போது திடீரென பழுது ஏற்படவே, உடனடியாக அது Newcastle விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது.
அந்த நேரத்தில் அந்த ஹெலிகொப்டரில் ராஜ குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. பின்னர், மாற்று ஹெலிகொப்டர் ஒன்றில் புறப்பட்டார் இளவரசி Anne. Sikorsky S-76 வகையைச் சேர்ந்த அந்த ஹெலிகொப்டரின் மதிப்பு 5 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.