எங்கும் அழுகுரல், கண்ணீர்... முதன்முறையாக பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ராணியாரின் உடல்
பேராலயத்திற்கு வெளியே பல மணி நேரமாக கண்ணீருடன் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்
மரபை பின்பற்றும் வகையில் மன்னர் சார்லஸ் தலைமையில் சிறப்பு நடவடிக்கை
ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் இருந்து எடின்பர்க் செயின்ட் கைல்ஸ் பேராலயத்தில் கொண்டுவரப்பட்ட ராணியாரின் உடல், தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் வைத்து காலமான பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் உடலானது எடின்பர்க் செயின்ட் கைல்ஸ் பேராலயத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
@reuters
அடுத்த 24 மணி நேரம் ராணியாரின் உடல் குறித்த பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் எனவும், இங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேராலயத்திற்கு வெளியே பல மணி நேரமாக கண்ணீருடன் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட ராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உள்ளூர் நேரப்படி 7.20 மணியளவில் மரபை பின்பற்றும் வகையில் மன்னர் சார்லஸ் தலைமையில் சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
@reuters
இதனிடையே, கைல்ஸ் பேராலயத்திற்கு வெளியே மக்கள் கண்ணீருடன் காணப்படுவதாகவும் பலர் விம்மி அழுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயின்ட் கைல்ஸ் பேராலயத்தில் அடுத்த 24 மணி நேரம் ராணியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
பலர் அஞ்சலி செலுத்தி வருவதாகவும், பல மணி நேரமாக பேராலயத்திற்கு வெளியே காத்திருந்தும் மக்கள் பொறுமை காத்ததாக தெரிவிக்கின்றனர்.
செயின்ட் கைல்ஸ் பேராலயத்தில் இருந்து ராணியாரின் உடல் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் எடின்பர்க் விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.
@reuters