மகாராணியார் பிரதமரை சந்திப்பதை புகைப்படம் எடுக்கத்தான் சென்றேன்: ஆனால்... நெகிழும் புகைப்படக் கலைஞர்
பிரித்தானிய மகாராணியார் உயிருடன் இருந்தபோது அவரை கடைசியாக சந்தித்த பெருமை புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
மகாராணியாரை சந்தித்ததை பெரும் கௌரவமாக கருதுவதாக தெரிவிக்கிறார் அவர்.
பிரித்தானிய மகாராணியார் புதிய பிரதமரை சந்திப்பதை புகைப்படம் எடுக்கத்தான் நான் அங்கு சென்றேன். ஆனால், மகாராணியாரையே புகைப்படம் எடுக்கும் ஒரு பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்கிறார் மகாராணியாரின் கடைசி நிகழ்வில் அவரை புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர்.
பிரித்தானியாவின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ் மகாராணியாரைச் சந்திக்கும் நிகழ்வை புகைப்படம் எடுப்பதற்காக பால்மோரல் அரண்மனைக்குச் சென்றிருந்தார், புகைப்படக் கலைஞரான Jane Barlow என்னும் பெண்.
The Queen greets Liz Truss
ஆனால், அவருக்கு மகாராணியாரை தனியாக புகைப்படம் எடுக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கிறது.
அதைவிட சிறப்பு, மகாராணியார் உயிருடன் இருந்தபோது அவரை புகைப்படம் எடுத்த கடைசி நபர், மகாராணியாரின் கடைசி புகைப்படங்களை எடுத்தவர் என்ற கௌரவம் Janeக்கு கிடைத்துள்ளது.
அத்துடன், நெருங்கிய குடும்ப உறவினர்களில் இளவரசர் ஹரிக்குக் கூட கிடைக்காத பாக்கியம் Janeக்கு கிடைத்துள்ளது. ஆம், மகாராணியார் உயிருடன் இருந்தபோது அவரை சந்தித்த, ராஜகுடும்பத்தினர் அல்லாத கடைசி நபர்களில் Janeம் ஒருவராகிவிட்டார்.
Jane Barlow
தான் மகாராணியாரை சந்தித்தபோது, உடல் ரீதியாக அவர் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், ஆனால் மனதளவிலோ அவர் மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார் Jane.
பிரித்தானிய மரபுப்படி, வெளியே இடி மின்னலுடன் கொட்டிக்கொண்டிருந்த மழை குறித்து மகாராணியாரும் Janeம் சின்னதாக உரையாடினார்களாம். வெளியேதான் வானிலை மோசமாக இருந்தது, அந்த அறையோ மகாராணியாரின் புன்னகையால் பிரகாசமாக இருந்தது என்கிறார் Jane!
தனது வாழ்வின் கடைசி நாள் வரை இந்த தருணத்தை மறக்கமாட்டார் Jane...
The Queen was "smiling" and "in good spirits", Barlow said